கரூர்-கோவை சாலையில் குழிகள் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
கரூர்: கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், பல இடங்களில் ஏற்-பட்ட குழிகள் சீரமைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்-படுகின்றனர்.தென் மாவட்டங்களில் இருந்து, கரூர் வழியாக கோவை, ஊட்டி மற்றும் கேரளா மாநிலங்களுக்கு நாள்தோறும் தேசிய நெடுஞ்சா-லைகளில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. கரூரில் இருந்து கோவை செல்லும் சாலைகளில், பல இடங்களில் குழிகள் ஏற்பட்-டுள்ளன. இதனால், கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.சாலையின் நடுப்பகுதியில் குழிகள் அதிகம் உள்ளதால், இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் அதிக பாதிப்புக்குள்ளாகி வரு-கிறது. குறிப்பாக, க.பரமத்தியில் இருந்து தென்னிலை வரை உள்ள, சாலையை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சீரமைக்க வேண்டியது அவசியம்.