கொடிக்கம்பங்களை அகற்றணும்
கொடிக்கம்பங்களை அகற்றணும்தேசிய, மாநில நெடுஞ்சாலை துறை, உள்ளாட்சி அமைப்புகள், அரசின் இதர துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில் நிறுவிய அரசியல் கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக்கம்பங்களை, 12 வாரங்களில் அகற்ற, மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், நேற்று தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சந்திரமோகன், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரிடம் இது குறித்து மனு அளித்தார். அதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பொது இடங்களில் வைத்துள்ள கொடிக்கம்பங்களை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முன், அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்ட தெரிவித்துள்ளார்.பட்டா கோரும் பழங்குடியினர்நாகமங்கலம் பஞ்.,ல் வசிக்கும் பழங்குடியின மக்கள், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: நாகமங்கலம் பஞ்.,ல், பழங்குடி இன மக்களுக்கு சந்தைமேட்டில் பட்டா வழங்கப்பட்டது. அதில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் சாலை அமைக்க, நாங்கள் குடியிருந்த வீடுகளை இடித்துள்ளதால், எங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆகையால் எங்களின் பட்டாவை மாற்றி, அருகில் இருக்கும் நாகதுணை கிராமத்திலுள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில், 20 குடும்பங்களுக்கும் மற்றும் புதிதாக, 22 குடும்பங்கள் என மொத்தம், 42 குடும்பங்களுக்கு நாகதுணையில் தலா, 3 சென்ட் நிலம் ஒதுக்கி, பட்டா வழங்கி, அந்த இடத்தில் புதிதாக வீடு கட்டித்தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.