அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
அ.தி.மு.க., பொதுக்கூட்டம்அரவக்குறிச்சி:மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 77வது பிறந்த நாளை முன்னிட்டு, அ.தி.மு.க., சார்பில் அரவக்குறிச்சியில் நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் சின்னசாமி, சரோஜா ஆகியோர் பேசினர்.பின், முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான விஜயபாஸ்கர் பேசியதாவது:தி,மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பொய் சொல்லியே ஆட்சிக்கு வந்த தி.மு.க.,வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். வரக்கூடிய சட்டசபை தேர்தல் என்பது, தமிழகத்திற்கு விடுதலைக்கான தேர்தல் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். அ.தி.மு.க., என்பது ஒரு குடும்பம், கட்சிக்குள் பிரச்னைகள் வரும்; அதை நாங்கள் பேசி தீர்த்துக் கொள்கிறோம். 2026ம் ஆண்டில் ஆடுகளம் தயாராக உள்ளது. வாருங்கள் மோதுவோம். துரோகிகள் வெளியே சென்றுவிட்டனர். தற்போது உண்மையான அ.தி.மு.க.,வினர் தான் உள்ளோம். கரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.இவ்வாறு பேசினார்.