அய்யர்மலை முருகன்கோவிலில் பாலாலயம்
அய்யர்மலை முருகன்கோவிலில் பாலாலயம்குளித்தலை:குளித்தலை அடுத்த அய்யர்மலையில், ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அய்யர்மலை மலையடிவார மண்டபத்தில் அருள்பாலித்து வரும் விநாயகர், பாலமுருகன் ஆகிய கோவில்கள் மற்றும் கோவில் விமானம் ஆகியவற்றிற்கு திருப்பணி நடக்க உள்ளது.இதை முன்னிட்டு, நேற்று காலை, 11:00 மணிக்கு, நுாற்றுக்கால் மண்டபத்தில் பாலாலய விழா நடந்தது. இதில், சிவாச்சாரியார்கள், யாகசாலையில் வேத மந்திரங்கள் முழங்கி பூஜை செய்தனர். செயல் அலுவலர், பணியாளர்கள், குடிப்பாட்டுக்காரர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் உபயதாரர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.