உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சியில்சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

அரவக்குறிச்சியில்சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

அரவக்குறிச்சியில்சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிஅரவக்குறிச்சி:சமூக நலன் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில், அரவக்குறிச்சி ஒன்றிய குழந்தை வளர்ச்சி மையத்தில், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் மூலம், கர்ப்பிணிகளுக்கு ஆண்டுதோறும் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திலும், கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பக் காலத்தில் முதல் தவணையாக, 2,000 ரூபாய், மூன்றாம் மாதம் முடிவில், 2,000 ரூபாய் மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம், கர்ப்பக்கால சேவைக்காக, 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது.அரவக்குறிச்சி வட்டாரத்தை சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு, ஒன்றிய அலுவலகத்தில் அமைந்துள்ள குழந்தை வளர்ச்சி மையத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் ஜெயந்தி மணிகண்டன், கர்ப்பிணிகளுக்கு கண்ணாடி வளையல், பூ, பட்டு புடவை, மஞ்சள் உள்ளிட்ட பொருள்களை சீர்வரிசை பொருட்களாக வழங்கினார். 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காந்திமதி மற்றும் பிற அலுவலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை