கொசு ஒழிப்பு பணி
குளித்தலை, குளித்தலை அடுத்த நங்கவரம் டவுன் பஞ்., பகுதியில் கொசு ஒழிப்பு பணி நடந்தது.கடந்த மாதம் தொடர்ந்து பெய்த மழையால், கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. இந்நிலையில், மக்களுக்கு தொற்றுநோய் பரவாத வகையில், கழிவுநீர் வடிகாலில் தேங்கிய குப்பை கழிவுகளை அகற்றி, குடியிருப்பு பகுதிகளில் கொசு ஒழிப்பாக புகை மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது.டவுன் பஞ்., செயல் அலுவலர் காந்தரூபன் பார்வையிட்டார் இதையடுத்து கழிவுநீர் தேங்கிய பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.