| ADDED : ஜூலை 23, 2024 01:39 AM
கரூர் : கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்-பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள் உள்பட மொத்தம், 482 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனா-ளிகளிடம் 49 மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பாக, 6 பேருக்கு, 5.23 லட்சம் ரூபாய் மதிப்பில் கை, கால் உள்ளிட்ட நவீன செயற்கை அவயங்களை வழங்-கினார். கலை பண்பாட்டுத்துறை சார்பாக இளையோருக்கான மாவட்ட கலைப்போட்டிகளில் பரதநாட்டியம், குரலிசை, கருவி-யிசை, கிராமிய நடனம் மற்றும் ஓவியப் போட்டிகளில் பங்-கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்க-ளையும் கலெக்டர் தங்கவேல் வழங்கினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், மாநகராட்சி கமிஷனர் சுதா, சப் கலெக்டர் பிரகாஷ், டி.ஆர்.ஓ.,க்கள் முகமதுபைசல் (கரூர்), தனலெட்சுமி (குளித்தலை) உள்பட பலர் பங்கேற்றனர்.