மேலும் செய்திகள்
மானாவாரி நிலங்களில் உழவு பணிகள் மும்முரம்
16-Aug-2024
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மழை பெய்து வருவதால், மானாவாரி நிலங்களில் விவசாயிகள் விதை தெளிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி, வீரியபாளையம், வயலுார், சரவணபுரம், பாப்பகாப்பட்டி, சிவாயம், குழந்தைப்பட்டி, மேட்டுப்பட்டி, வரகூர், புனவாசிப்பட்டி, மத்திப்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக, மானாவாரி நிலங்களில் ஈரம் அதிகம் இருந்தது. இந்த ஈரத்தை கொண்டு, மானாவாரி நிலங்களில் டிராக்டர் கொண்டு உழவு பணி செய்யப்பட்டது. மேலும் நிலங்களில், விவசாயிகள் விதை தெளிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது எள், சோளம் ஆகிய விதைகள் விதைக்கப்படுகிறது.
16-Aug-2024