உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா ஆலோசனை

கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா ஆலோசனை

குளித்தலை : குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும், 12ல் நடைபெற உள்ளது.இதையடுத்து நேற்று மாலை குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவல-கத்தில் கும்பாபிஷேகத்தையொட்டி முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., தனலட்சுமி தலைமை வகித்தார்.ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் மகுடேஷ்வரன், தாசில்தார் சுரேஷ், கோவில் செயல் அலுவலர் சந்திரசேகர் மற்றும் சிவாச்சா-ரியார்கள் பங்கேற்றனர்.கும்பாபிஷேகம் அன்று அதிகளவு பக்தர்கள் கூட்டம் வரும் என்-பதால், வாகன போக்குவரத்தை உழவர் சந்தை புறவழிச்சா-லையில் மாற்றம் செய்தல், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கார், பைக் வைகைநல்லுார் அக்ரஹாரம் தெருவில் நிறுத்தம் செய்தல், பக்தர்கள் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்-துதல் குறித்து பேசப்பட்டது.வருவாய் துறை, மின்வாரியம், நகராட்சி, தீயணைப்பு, போக்குவ-ரத்து, நெடுஞ்சாலை, பொது பணித்துறை உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை