மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்
கரூர், ஆக. 25-கரூர் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான பயிலரங்கம், மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நேற்று நடந்தது.அதில், வரும் சட்டசபை தேர்தலையொட்டி, தொகுதி வாரியாக கட்சிக்கு, புதியதாக உறுப்பினர்களை சேர்ப்பது, கரூர் மாவட்டத்தில் உள்ள, நான்கு சட்டசபை தொகுதிகளில், இரண்டு லட்சத்து, 50 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்வது, கட்சி நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்பது குறித்து, சேலம் பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் நாராயணன் விளக்கம் அளித்து பேசினார்.அப்போது, சேலம் கிழக்கு மாவட்ட பார்வையாளர் அண்ணாதுரை, கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியம், துணைத் தலைவர் செல்வம் உள்பட பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்றனர்.