உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1.35 கோடி பறிமுதல்

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1.35 கோடி பறிமுதல்

கரூர்:கரூர் மாவட்டத்தில், இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற, 1.35 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில், வாகனங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றதா என்பதை கண்காணிக்க, 24 மணி நேரமும் கரூர் மாவட்டத்தில் பறக்கும் படையினரும், நிலை குழுவினரும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.கரூரில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்ட போது, பிரகாஷ் என்பவர் காரில் கொண்டு சென்ற 3.20 லட்சம் ரூபாய் உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்படி தேர்தல் தேதி அறிவித்த பிறகு, நேற்று வரை பறக்கும் படைகள் மூலம், 83.63 லட்சம் ரூபாய், நிலை குழுக்கள் மூலம், 52.13 லட்சம் ரூபாய் என மொத்தம், 1.35 கோடி ரூபாய் மதிப்பிலான தொகை மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேலும் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும், தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம், 15 புகார்களும், 'சி-விஜில்' செயலி மூலம், 201 புகார்களும் வரபெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ