உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விவசாயியிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது

விவசாயியிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, விவசாயியிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.அரவக்குறிச்சி அருகே ஆண்டிபட்டிகோட்டையை சேர்ந்தவர் விவசாயி பாபு, 47. இவர் நேற்று அதிகாலை ஆண்டிபட்டி-கோட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரை மாவட்டம், அலங்காநல்லுார், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன், 25, என்பவர் பாபுவின் சட்டை பாக்கெட்டில் இருந்த, 1,000 ரூபாயை கத்தியை காட்டி மிரட்டி பறிக்க முயன்றுள்ளார்.அப்போது பாபு கூச்சலிட்டதால், இப்பகுதி மக்கள் மணிகண்-டனை கையும் களவுமாக பிடித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அரவக்குறிச்சி போலீசார், மணிகண்டனை கைது செய்தனர். மேலும் மணிகண்டனிடம விசாரணை மேற்கொண்ட போது, ஏற்-கனவே மணிகண்டன் மீது மதுரை மாவட்டத்தில் மூன்று குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. எனவே மணிகண்டன் மீது பாபு அளித்த புகாரின் பேரில், அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை