மேலும் செய்திகள்
மரக்கன்றுகள் பராமரிப்பு பணியில் தொழிலாளர்கள்
05-Feb-2025
கரூர்: புகழூர் அரசு மேல்நிலை பள்ளியில் மரக்கன்றுகள் வளர்க்கும் பயிற்சி மூலம், மாணவர்களிடம் தொழில் முனைேவாராக உரு-வாக வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கும் முயற்சியில் ஆசி-ரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.ஒரு மாவட்டத்தில், 33 சதவீதம் காடுகள் இருந்தால் மட்டுமே, அங்கு போதிய மழை கிடைக்கும். ஆனால், கரூர் மாவட்டத்தில், 4 சதவீதம் மட்டுமே காடுகள் உள்ளன. மரங்கள் வெறும் நிழல் தருவது மட்டுமின்றி, பறவைகளின் வாழ்விடமாகவும், பிராண-வாயு உற்பத்தி செய்யும் மையமாகவும் விளங்குகின்றன என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இதன்படி, கரூர் மாவட்டம் புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், மாணவர்கள் மத்தியில் மரம் வளர்ப்பின் அவசியம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், பள்ளி வளா-கத்தில் மரக்கன்றுகளை வளர்க்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகி-றது.இது குறித்து, அப்பள்ளியின் தாவரவியல் ஆசிரியர் ஜெரால்டு கூறியதாவது:தமிழ்நாடு அரசு சார்பில் பசுமை பள்ளி திட்டம் மூலம் நாற்-றங்கால் (மரக்கன்று உற்பத்தி) பண்ணை அமைக்கும் திட்ட பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஒரு பகுதியாக மாணவர்-களுக்கு நாற்றங்கால் உற்பத்தி செய்வது குறித்து பயிற்சி வழங்-கப்படுகிறது. முதலில், 50 மாணவர்களுக்கு நாற்றங்கால் நடு-வது பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள், வாயிலாக படிப்-படியாக மற்ற மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.இதில், செம்மண், மக்கும் உரம், தேங்காய் கழிவுகள் என 1:2:2 என்ற விகிதத்தில் கலக்க வேண்டும். பின், மரத்தின் விதையை எவ்வாறு பதிக்க வேண்டும். அதற்கு, தண்ணீர் பாய்ச்சும் முறை, மரக்கன்றுகள் வளரும் வரை பராமரிப்பது எப்படி உள்பட பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு மரமும் தரும் பலன்கள் என்ற அடிப்படை விபரங்கள் விளக்கி கூறப்படுகிறது. இவ்வாறு, மாணவர்கள் உருவாக்கிய மரக்கன்றுகள் விற்பனை செய்யப்படு-கிறது. பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் பிறந்த நாளின் போது, அவர்களிடம் மரக்கன்றுகள் விற்பனை செய்யப்படும்.அந்த பணத்தை வைத்து மாணவர்கள் தங்களின் படிப்புக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ள முடியும். மாண-வர்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கைக்காக தொழில் தேடுபவர் மற்றும் தொழில் முனைவோர் என இரு வாய்ப்புகள் உள்ளது. பல லட்சம் ரூபாய் பணம் சம்பாதிப்பதற்கு தொழிலாளராக வேலைக்கு செல்வதை விட, தொழில் முனைவோராக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.இவ்வாறு, அவர், கூறினார்.
05-Feb-2025