ஆக்கிரமிப்புகளை அகற்றலாமே
குளித்தலை, குளித்தலை, தென்கரை பாசன வாய்க்கால் தென் பகுதி முதல், ராஜேந்திரம் பஞ்., மருதுார் டவுன் பஞ்., குமாரமங்கலம் ரயில்வே கேட் வரை வாய்க்கால் கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, புதிய தார்ச்சாலை அமைத்தால், கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் சாலை விபத்துகளை தடுக்க முடியும். அனைத்து கிராமங்களும் தென் கரை பகுதியில் இருப்பதால் பொது மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் சாலை விபத்துகளை தடுக்கும் வகையிலும், தென் கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தார்ச்சாலை அமைக்க வேண்டும்.