மார்ச் 29ல் நடைபெறவிருந்த தனியார்வேலை வாய்ப்பு முகாம் இடம் மாற்றம்
மார்ச் 29ல் நடைபெறவிருந்த தனியார்வேலை வாய்ப்பு முகாம் இடம் மாற்றம்கரூர்:வரும், 29ல் நடக்கும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லுாரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும், 29ம் தேதி நடக்க இருந்தது. இந்நிலையில், கரூர் திருக்காம்புலியூர் சேலம் பைபாஸ் சாலையில் உள்ள ஜெயராம் வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு வேலை வாய்ப்பு முகாம் மாற்றப்பட்டுள்ளது. உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி துறை, ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத்துறை, மருத்துவம் சார்ந்த துறைகள் உள்ளிட்ட, 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்காக, 10,000-க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.முகாமில், 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழிற்கல்வி பயின்றவர்கள் என அனைத்து பிரிவினரும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு இல்லை. அனைத்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தங்களது சுயவிபரம், கல்வி சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொள்ள வேண்டும். பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. வேலைநாடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்தல் வேண்டும். மேலும், விபரங்களுக்கு, 93452 61136 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.