உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 89 ஆயிரம் குடும்பங்களுக்குசில்வர் பாத்திரங்கள் வழங்கல்

89 ஆயிரம் குடும்பங்களுக்குசில்வர் பாத்திரங்கள் வழங்கல்

89 ஆயிரம் குடும்பங்களுக்குசில்வர் பாத்திரங்கள் வழங்கல்கரூர் : துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் சட்டசபை தொகுதியில் வசிக்கும், 89 ஆயிரம் குடும்பங்களுக்கு சில்வர் பாத்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.கரூர் கோடங்கிப்பட்டியில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, தி.மு.க., சார்பில் சில்வர் பாத்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மின்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். கரூர் சட்டசபை தொகுதியில், 89 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் தோறும் சென்று, சில்வர் பாத்திரங்கள் வழங்கும் பணியில் தி.மு.க.,வினர் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாநகராட்சி துணை மேயர் தரணி சரவணன், மாநகராட்சி மண்டல தலைவர் கனகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி