உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டிப்பர் டிராக்டர் கவிழ்ந்ததில் தீர்த்த குடம் எடுத்து வந்த பள்ளி சிறுவன் உயிரிழப்பு

டிப்பர் டிராக்டர் கவிழ்ந்ததில் தீர்த்த குடம் எடுத்து வந்த பள்ளி சிறுவன் உயிரிழப்பு

குளித்தலை அருகே நச்சலூரில் கோவில் திருவிழாவிற்கு தீர்த்த குடம் எடுத்து வந்த போது டிப்பர் டிராக்டர் கவிழ்ந்ததில் 8 வயது பள்ளி சிறுவன் சம்பவ இடத்தில் உயிரிழப்புகரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி, நச்சலூர் பழைய கட்டளை மேட்டு வாய்க்கால் புதுப்பாளையம் கரைக் காளியம்மன் கோவில் திருவிழாவை யொட்டி நச்சலூர் கிராம பொதுமக்கள் இன்று காலை 11:00 மணியளவில் பெட்டவாய்த்தலை கரும்பாயி அம்மன் கோவில் காவிரி ஆற்றில் தீர்த்த குடம் எடுத்துவிட்டு, 25 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டிப்பர் டிராக்டரில் நச்சலூர் நோக்கி வந்தனர்.கீழ சுக்காம்பட்டி - நச்சலூர் சாலையில் டிப்பர் டிராக்டர் செல்லும்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் அதி வேகமாக வந்து முந்தி சென்று எதிரே வந்த இருசக்கர வாகன மீது மோதி விபத்து ஏற்பட்டது.அப்போது டிப்பர் டிராக்டர் டிரைவர் பிரேக் போட்டதில் டிராக்டர் இன்ஜின் கவிழ்ந்தது.இந்த விபத்தில் இன்ஜினில் அமர்ந்து வந்த நச்சலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் ஸ்ரீ தர்ஷன் வயது 8 ,சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.உடன் அமர்ந்து வந்த அஸ்வின் வயது 12, தர்ஷன் வயது 7. சிசில்கான் வயது 24, ஆகியோர்களுக்கு பலத்த காய ஏற்பட்டு, குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.சம்பவ இடத்தில் உயிரிழந்த பள்ளி சிறுவன் தந்தை குடும்பத்துடன் திருப்பூரில் வசித்து வந்தனர்.சிறுவன் தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.கோவில் திருவிழாவிற்காக வந்தபோது துயரச்சம்பவம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.குளித்தலை போலீசார் உயிரிழந்த பள்ளி சிறுவன் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் உட்படுத்தி உள்ளனர்.இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை