உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குண்டும், குழியுமான அம்மன் நகர் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

குண்டும், குழியுமான அம்மன் நகர் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

கரூர், கரூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அருகே, அம்மன் நகரில் சாலை, பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அருகே அம்மன் நகர் பகுதியில், ஏராளமானோர் வசித்து வருகின்றனர். மேலும், அந்த பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள் உள்ளது. இந்நிலையில், அம்மன் நகரில் சாலை, பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. இதுகுறித்து, அந்த பகுதி பொது மக்கள், கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். மழைக்காலங்களில் குண்டும், குழியுமான சாலையில், தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகின்றனர்.எனவே, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அருகே, அம்மன் நகர் சாலையை உடனடியாக, பராமரிக்கும் வகையில் புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்