உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் ரத்ததானம் விழிப்புணர்வு பேரணி

கரூரில் ரத்ததானம் விழிப்புணர்வு பேரணி

கரூர் : கரூர், காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.கலெக்டர் தங்கவேல் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 14ல், உலக குருதி கொடையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்தும், அதன் மூலம் உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்படுவது குறித்தும் பேரணி நடந்தது. ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், கரூர் மருத்துவ கல்லுாரி முதல்வர் (பொ) டீன் ராஜா, ரத்த வங்கி மருத்துவ அலுவலர் அறிவழகன், இருக்கை மருத்துவ அலுவலர் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை