பெண்ணுக்கு கொலை மிரட்டல் ஆயுதப்படை போலீஸ் மீது வழக்கு
கரூர், கரூர் அருகே, இளம் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த ஆயுதப்படை போலீஸ் மீது, வழக்குப் பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் பெரியார் நகரை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் ஜெகன்ராஜ், 32; திண்டுக்கல் மாவட்டம், பழநி ஆயுதப்படையில், போலீசாக வேலை செய்து வருகிறார். இவர், கரூர் அருகே மண்மங்கலம் பகுதியை சேர்ந்த திருமணமான, சிறு வயது தோழியான இளம் பெண்ணுக்கு கடந்த, 9ல் போன் செய்துள்ளார். அவர் போனை எடுக்கவில்லை.இதனால், ஆத்திரம் அடைந்த ஜெகன்ராஜ், இளம்பெண் வீட்டுக்கு சென்று, இரும்பு கம்பியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, பெண் கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார், ஆயுதப்படை போலீஸ் ஜெகன்ராஜ் மீது, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.