உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் உறவினர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் உறவினர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை

கரூர்:கரூர் அருகே, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உறவினர் வீட்டில், நேற்று சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை நடத்தினர்.கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் பிரகாஷ், 50. இவரது மகள் ேஷாபனா பெயரில், கரூர் அருகே குன்னம்பட்டி, தோரணகல்பட்டியில் உள்ள, 22 ஏக்கர் நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம், கிரையம் செய்து கொண்டதாக, கரூர் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் என்பவர் கடந்த ஜூன், 9ல் கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்த வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது ஆதரவாளர் பிரவீன், சென்னை வில்லிவாக்கம் முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரித்திவிராஜ் ஆகியோரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கடந்த ஜூலை, 17ல் கைது செய்தனர். தற்போது, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட மூன்று பேரும் கடந்த, 1ல் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.இந்நிலையில், நேற்று மதியம் கரூர் மாவட்டம், வெள்ளியணை முஷ்டகிணத்துப்பட்டியில் உள்ள, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உறவினர் மணி, 58, என்பவரது தோட்டத்து வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை நடத்தினர். அரைமணி நேர சோதனைக்கு பிறகு, அவர்கள் திரும்பி சென்றனர்.கிராம பஞ்சாயத்து கான்ட்ரக்டராக உள்ள மணி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் தம்பி சேகர் என்பவரின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ