உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நுாறு நாள் வேலை வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

நுாறு நாள் வேலை வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி பஞ்சாயத்தில், 100 நாள் திட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்க கோரி விவசாய தொழிலாளர்கள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பஞ்சாயத்து ஆபீஸ் வளாகம் முன் நடந்தது.சிந்தலவாடி கிளை செயலாளர் பட்டு தலைமை வகித்தார். பஞ்சாயத்து மூலம், நுாறு நாள் திட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது.இதில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தொடர்ந்து வேலை தரப்படுகிறது. மற்ற கிராமங்களில் உள்ளவர்களுக்கு வேலை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.பஞ்சாயத்து மூலம் அனைத்து வார்டுகளுக்கும், சரியாக வேலையை பிரித்து வழங்குவதற்கான நடவடிக்கையை பஞ்சாயத்து நிர்வாகம் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று பஞ்சாயத்து அலுவலகம் முன், விவசாய தொழிலாளர்கள் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கிருஷ்ணராயபுரம் யூனியன் அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசந்தர், லாலாப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் நுாறு நாள் திட்ட வேலை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. இதையடுத்து கண்டன ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கண்ணதாசன், செயலாளர் ராஜூ, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துசெல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை