உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மின் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்ட தே.மு.தி.க., சார்பில், மின்கட்டண உயர்வை கண்-டித்து கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப் அருகில் கண்டன ஆர்ப்-பாட்டம் நடந்தது.கரூர் புறநகர் மாவட்ட தே.மு.தி.க., செயலாளர் சிவம் ராஜேந்-திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டணம் உயர்வு காரணமாக ஏழை மக்கள், வணிக நிறுவனங்கள் நடத்து-பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேஷன் கடைகளில் வினி-யோகம் செய்யப்படும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்து தரப்பினருக்கும், 1 முதல் 5 தேதிக்குள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக அரசு, காவிரி ஆற்றில் தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டிய நீரை முறையாக திறந்து விட மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது. கரூர், குளித்-தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் பகுதிகளை சேர்ந்த தே.மு.தி.க.,வினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்