உயர்மட்ட பாலத்தில் எரியாத விளக்குகளால் பெரும் அவதி
உயர்மட்ட பாலத்தில் எரியாதவிளக்குகளால் பெரும் அவதிகரூர், நவ. 7-கரூர் அருகே, வெங்ககல்பட்டி உயர்மட்ட பாலத்தின், இணைப்பு சாலைகளில், மின் விளக்குகள் சரிவர எரியாமல் உள்ளது.கரூர்-திண்டுக்கல் பழையசாலை, வெங்ககல் பட்டியில், திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே கடந்த, சில ஆண்டுகளுக்கு முன்பு, உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. அதன் வழியாக வெள்ளியணை, குஜிலியம் பாறை, பாளையம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன.அதை தவிர வெள்ளியணை உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேலைக்காகவும், மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லுாரிகளுக்காகவும், உயர்மட்ட பாலம் வழியாக கரூர் நகருக்கு செல்கின்றனர். இதனால் கடந்த, 2020ல், அ.தி.மு.க., ஆட்சியின் போது, உயர்மட்ட பாலத்தில், சர்வீஸ் சாலையின் இரண்டு பக்கமும், நடுப்பகுதியில் மின் கம்பத்தில் விளக்குகள் அமைக்கப்பட்டது. தற்போது, பெரும்பாலான விளக்குகள் எரிவது இல்லை.இதனால், வெங்ககல்பட்டி பாலம் வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, பாலத்தின் சர்வீஸ் சாலையில் உள்ள, அனைத்து மின் கம்பத்தில் உள்ள, விளக்குகளையும் எரிய, வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.