உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முதியவர் மாயம் மனைவி புகார்

முதியவர் மாயம் மனைவி புகார்

கரூர்: கரூரில் கணவரை காணவில்லை என, போலீசில் மனைவி புகார் செய்துள்ளார்.கரூர் அன்சாரி தெருவை சேர்ந்தவர் ராஜூ, 64; இவர் கடந்த, 4ல் அதிகாலை டீ வாங்க வீட்டில் இருந்து கடைக்கு சென்றுள்ளார்.ஆனால் இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மனைவி மாரியம்மாள், 51, போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

கூலி தொழிலாளிக்கு மிரட்டல் அ.தி.மு.க., பிரமுகர் கைது

கரூர்: கூலி தொழிலாளியை மிரட்டியதாக, அ.தி.மு.க., வார்டு செயலாளரை போலீசார் கைது செய்தனர்.கரூர் வெங்கமேடு என்.எஸ்.கே., நகரை சேர்ந்தவர் ரமேஷ், 47; கரூர் மாநகராட்சி, 10 வது வார்டு அ.தி.மு.க., செயலாளர். இவர் கடந்த, 8 இரவு, வெங்கமேடு திருப்பூர் சாலையை சேர்ந்த சஞ்சய், 23, என்பவரை முன் விரோதம் காரணமாக, தகாத வார்த்தை பேசி அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து, சஞ்சய் போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து, வெங்கமேடு போலீசார் அ.தி.மு.க., வார்டு செயலாளர் ரமேசை கைது செய்து விசாரிக்கின்றனர்.

மனைவி மாயம் கணவர் புகார்

குளித்தலை: குளித்தலை அடுத்த, மாலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி, 25, கூலி தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி, 19. இருவருக்கும் ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இன்றி ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.இந்நிலையில் கடந்த, 4 காலை, 10:30 மணியளவில் அருகில் உள்ள டைலர் கடைக்கு செல்வதாக புவனேஸ்வரி கூறி சென்றார். வெகு நேரமாகியும் திரும்ப வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மனைவியை காணவில்லை என கார்த்தி கொடுத்த புகார்படி. பாலவிடுதி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி