உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மூன்று ஓட்டுச்சாவடியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர கோளாறு

மூன்று ஓட்டுச்சாவடியில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர கோளாறு

குளித்தலை: குளித்தலை அடுத்த, பஞ்சப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடி, 127 வது பாக எண்ணில் உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் காலை, 7:00 மணிக்கு கோளாறு ஏற்பட்டது. இதனால், 45 நிமிடம் ஓட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது. வேறு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வரவழைக்கப்பட்டு, ஓட்டுப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.இதேபோல், சின்னப்பனையூர் ஓட்டுச்சாவடியில் பாக எண், 241ல் மதியம் 1:15 மணியளவில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் பேட்டரியில் கோளாறு ஏற்பட்டு, ஓட்டுப்பதிவு தடை ஏற்பட்டது. 1 மணிநேரம் தாமதமாக புதிய இயந்திரம் வரவழைக்கப்பட்டு, மீண்டும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.இதேபோல், கே.பேட்டை அரசு ஆதி திராவிட நடுநிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில், 3:20 மணியளவில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. 1 மணி நேரம் ஓட்டுப்பதிவு தடைபட்டது. பின், புதிய இயந்திரம் கொண்டு வரப்பட்டு ஓட்டுப்பதிவு நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ