உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சார்பதிவாளர் அலுவலகத்தில் அடிக்கடி சர்வர் பழுது

சார்பதிவாளர் அலுவலகத்தில் அடிக்கடி சர்வர் பழுது

கரூர்: சார்பதிவாளர் அலுவலகங்களில் அடிக்கடி ஏற்படும் சர்வர் கோளாறால், பத்திரப்பதிவுக்கு செல்லும் பொதுமக்கள், பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும், 'ஆன்லைன்' வழியாக மட்டுமே பத்திரப்பதிவு நடக்கிறது. சொத்து விற்பனை, வாங்குதல் உள்ளிட்ட, அனைத்து பத்திரப்பதிவு செய் கிறவர்களும், உரிய ஆவணங்களை பதிவு துறையின், இணையதளத்தில் பதிவு செய்து, தங்களுக்கு ஏற்ற நாளில், பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த வரிசைப்படி பத்திரப்பதிவு செய்யப்படும். அரசு உத்தரவுப்படி, ஒரு மணி நேரத்துக்கு, 20 பத்திரப்பதிவு வரை பதிவு செய்ய வேண்டும். அதன்படி, ஒரு பத்திரப்பதிவுக்கு, மூன்று நிமி டங்கள் வரைதான் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில நாட்களில் சர்வர் கோளாறு ஏற்படுவதால், பத்திரப்பதிவு செய்ய செல்லும், பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது: சார்பதிவாளர் அலுவலகங்களில், சர்வர் கோளாறு ஏற்படுவதால், மாலை, 6:00 மணிக்கு முடிக்க வேண்டிய பத்திரப்பதிவு பணிகள் இரவு, 9:00 மணியை தாண்டி விடுகிறது. இதனால், வெளியூர்களில் இருந்து வருகிறவர்கள், குறிப்பிட்ட நேரத்தில் வீடுகளுக்கு செல்ல முடியவில்லை. குறிப்பாக குழந்தைகள், பெரியவர்களுடன் பத்திரப்பதிவுக்கு வருகிறவர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். இதனால், சார்பதிவாளர் அலுவலகங்களில் சர்வர் சிறந்த முறையில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் கூறியதாவது: பத்திரப்பதிவில் ஆன்லைன் நடைமுறை வந்தது முதல், சர்வர் பிரச்னை உள்ளது. சில நாட்களில் கால் மணி நேரம், அரைமணி நேரத்தில் சரியாகி விடும். முகூர்த்த நாட்கள் உள்ளிட்ட, முக்கிய நாட்களில் அதிக பத்திரங்கள் பதிவு செய்யும் போது, சர்வர் முடங்கி விடும். அப்போது, சர்வர் இயல்பு நிலைக்கு திரும்ப, பல மணி நேரம் ஆகும். சர்வர் பழுது ஏற்பட்டால், அதை சரி செய்யும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால், காலதாமதம் ஆகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை