உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் இந்து முன்னணி சார்பில் 200 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை

கரூரில் இந்து முன்னணி சார்பில் 200 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை

கரூர்: கரூர் மாவட்டத்தில், 200 இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.இந்துக்களின் முக்கிய திருவிழாவான, விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்., 7ல் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவை, வெகு விமர்சையாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.கரூர் டவுன், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், வேலாயுதம்பாளையம், சின்னதாராபுரம், தோகமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், 200 சிலைகள் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதுகுறித்து, கரூர் மாவட்ட இந்து முன்னணி பொருளாளர் ரமேஷ் குமார் கூறியதாவது: இந்து முன்னணி சார்பில், வேலாயுதம்பாளையத்தில் சிலைகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டு விடும். நாளை பூஜைகள் நடத்தப்பட்டு தொடர்ந்து, மூன்று நாட்களில் காவிரி, அமராவதி ஆறுகளில் சிலைகள் கரைக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ