மேலும் செய்திகள்
பக்தர்கள் மீது மாடு தாண்டும் திருவிழா
05-Oct-2025
ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் விபரீத முடிவு
05-Oct-2025
அரசு பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
05-Oct-2025
கரூர்: கரூர் ரயில்வே ஸ்டேஷன் முதல், சேலம் தேசிய நெடுஞ்சாலை வரை, அண்ணாசாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக, வெங்கமேடு ரயில்வே மேம்பாலம் முதல், சேலம் தேசிய நெடுஞ்சாலை வரை அண்ணா சாலை அமைக்கப்பட்டுள்ளது.கரூர்-ஈரோடு ரயில்வே வழித்தடத்தையொட்டி, அண்ணா சாலை செல்வதால், அந்த பகுதியில் அதிகளவில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. அதை, மாநகராட்சி நிர்வாகம் நாள்தோறும் அகற்றுவது இல்லை. இதனால், அந்த பகுதியில் குப்பை பெரும்பாலும், சாலைகளில் குவிக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்படுகிறது. அதில், தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்களும் எரிவதால், துர்நாற்றமும், பெரும் சுகாதார கேடும் ஏற்படுகிறது. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, அண்ணாசாலை யில் தேங்கியிருந்த குப்பையை, கரூர் மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் அகற்றினர். மேலும், குப்பையை அண்ணாசாலையில் கொட்டினால், நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கரூர் மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை போர்டும் வைத்துள்ளது.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025