உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை

கரூர்:கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், குரு பெயர்ச்சி விழாயையொட்டி, 2 வது நாளாக லட்சார்ச்சனை நடந்தது. நவக்கிரகங்களில் முக்கிய கிரகமான குரு பகவான், ஆண்டுக்கு ஒரு முறை ராசி விட்டு மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆவது வழக்கம். இன்று மாலை, 5:19 மணிக்கு குரு பகவான், மேஷ ராசியில் இருந்து, ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதையொட்டி, நேற்று முன்தினம் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நவக்கிரக மூர்த்திகளுக்கும், குரு பகவானுக்கும் விநாயகர் வழிபாடு, மஹா சங்கல்பத்துடன் லட்சார்ச்சனை துவங்கியது. நேற்று, இரண்டாவது நாளாக லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு ஆராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்