உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாடகை பாக்கி தராத வீடு கடை, அலுவலகத்துக்கு பூட்டு

வாடகை பாக்கி தராத வீடு கடை, அலுவலகத்துக்கு பூட்டு

வாடகை பாக்கி தராத வீடுகடை, அலுவலகத்துக்கு பூட்டுகரூர், ஆக. 21-கரூரில், வாடகை பாக்கி தராத கடைகள் மற்றும் வீடுகளுக்கு, நீதிமன்ற உத்தரவுபடி பூட்டு போடப்பட்டது.கரூர் கல்யாண பசுபதீஸ்வரா கோவிலுக்கு சொந்தமான கடைகள், வீடுகள் தெற்கு மடாக வீதியில் உள்ளது. அதில், இரண்டு வீடுகள், இரண்டு கடைகள் மற்றும் ஒரு அலுவலகத்துக்கு வாடகை பாக்கி நிலுவையில் உள்ளது. இதையடுத்து, கரூர் நீதிமன்ற உத்தரவுபடி கடைகள், வீடுகள் மற்றும் அலுவலகத்தை காலி செய்ய, கோவில் நிர்வாம் சார்பில் பல மாதங்களுக்கு முன், நோட்டீஸ் அனுப்பபட்டது. ஆனால், கடைகளை சம்பந்தப்பட்டவர்கள் காலி செய்யவில்லை. இதையடுத்து, நேற்று கோவில் செயல் அலுவலர் சரவணன், வி.ஏ.ஓ., அங்குராஜ் முன்னிலையில், நீதிமன்ற அமீனா சத்யா கடைகள், வீடுகள் மற்றும் அலுவலகத்துக்கு பூட்டு போட்டார். இதனால், கரூர் தெற்கு மடாக வீதியில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை