| ADDED : ஜூன் 16, 2024 12:56 PM
அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டியில் ஜவுளி தொழில், பைனான்ஸ் தொழில், வீட்டு உபயோக பொருட்கள் தவணை முறை தொழில் உட்பட பல்வேறு தொழில்கள் செய்து வருகின்றனர். அருகில் உள்ள கரூருக்கு தினசரி சென்று, இரவு வீடு திரும்புகின்றனர். அதிகாலை கிளம்பி செல்ல பஸ் வசதி இல்லாததால், தொழில் செய்வோர் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். கொரோனா காலத்திற்கு முன், அதிகாலை, 3:00 மணிக்கு இயக்கப்பட்டு வந்த பஸ், தற்போது, 5:00 மணிக்கு இயக்கப்படுகிறது. இதனால், தொழில் செய்வோர் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி, மதுரை - சேலம் வழித்தடத்தில் தேசிய நெடுஞ்சாலை வழியாக பைபாஸில் செல்லும் பஸ்சை, பள்ளப்பட்டி - அரவக்குறிச்சி சாலை வழியாக கரூருக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என, சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.