உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

கரூர்:கரூரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த, 12ல் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. நாள்தோறும் இரவு, பல்வேறு சிறப்பு வாகனங்களில் உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது. கடந்த, 17ல் பூச்சொரிதல் விழா, 19ல் காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன் தினம் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.அன்று அதிகாலை முதல் பக்தர்கள், அமராவதி ஆற்றில் அலகு குத்திக் கொண்டும், அக்னி சட்டி எடுத்து கொண்டும் ஊர்வலமாக, மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். நேற்று இரவு, சிறப்பு மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. இன்று மாலை, 5:30 மணிக்கு கம்பம் ஆற்றுக்கு செல்லுதல் நிகழ்ச்சி நடக்கிறது.ஜூன் 6ல் பஞ்ச பிரகாரம், 7ல் புஷ்ப பல்லக்கு, 8ல் ஊஞ்சல் உற்சவம், 9ல் அம்மன் குடிபுகுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ