உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாட்டு வியாபாரியை கொல்ல முயன்ற கூலிப்படை கைது

மாட்டு வியாபாரியை கொல்ல முயன்ற கூலிப்படை கைது

பாலக்காடு:கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் முதலியார் தெருவை சேர்ந்தவர் பத்மநாபன், 41, மாட்டு வியாபாரி. இவர், பாலக்காடு மாவட்டம் ஒற்றைப்பாலம் அருகே உள்ள வாணியம்குளம் சந்தைக்கு, ஜூலை 11ம் தேதி காலை வந்தார். அப்போது, ஒற்றைப்பாலம் அருகே மர்ம நபர்கள் அவரை கத்தியால் சரமாரியாக குத்தி தப்பினர். அங்கிருந்தோர் பத்மநாபனை மீட்டு திருச்சூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.போலீசார் விசாரணையில், பத்மநாபனை தாக்கியது, கோவை மாவட்டம், கோவைப்புதுார் மகாலட்சுமி நகரை சேர்ந்த சல்மான்கான், 22, அவரது சகோதரர் ஷாருக்கான், 21, கரும்புக்கடை சேரன் நகரைச் சேர்ந்த முகமதுநாசர், 36, சங்கர் நகரைச் சேர்ந்த முகமது ரசியா ராஜா, 22, மகாலிங்கபுரம் பகுதி சேர்ந்த சையத் அஸ்ஹருதின், 22, என்பது தெரியவந்தது.ஐந்து பேரையும் கைது செய்த போலீசார் பாலக்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.முன்விரோதம் காரணமாக, இந்த கொலை முயற்சி நடந்ததாகவும், கொலை செய்ய திட்டமிட்டவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி