உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மேட்டுப்பட்டி துர்க்கையம்மன் கோவில் திருவிழா

மேட்டுப்பட்டி துர்க்கையம்மன் கோவில் திருவிழா

குளித்தலை : குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன் மேட்டுப்பட்டி துர்க்கையம்மன் கோவில் பிரசித்தி பெற்றது.இந்த கோவில் திருவிழா, ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வருவது வழக்கம். இந்தாண்டு திருவிழா, கடந்த வாரம் கோவில் நிர்வாக பொறுப்பாளர் குழந்தைவேல் தலைமையில் துவங்கியது. கடந்த, 12ல் முதல் நாள் விழா தொடங்கப்பட்டது. சுவாமிகளின் ஆபரண பெட்டிகளை கோவில் கிணற்றிற்கு தாரை தப்பட்டை முழங்க அழைத்து சென்றனர்.தொடர்ந்து கிணற்றில் துர்க்கையம்மனுக்கு கரகம் பாலிக்கப்பட்டது. பின், குதிரைக்கு புண்ணிய தீர்த்தம் தெளிக்கப்பட்டு, குதிரை மீது துர்க்கையம்மன் கரகம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து தாரை தப்பட்டை முழங்க, வாண வேடிக்கைகளுடன் துர்க்கையம்மன் கரகத்தை ஊர்வலமாக அழைத்து சென்றனர்.இரண்டாம் நாள் விழாவில் அம்மனுக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், மொட்டை அடித்தல், கிடா வெட்டுதல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்கள் செய்து வழிபட்டனர். மூன்றாம் நாள் விழாவான நேற்று, அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் செய்து வழிபட்டனர். இன்று துர்க்கையம்மன், வைரவன் சுவாமி களுக்கு ஆராதனைகள் செய்து வழிபடுகின்றனர்.விழாவை காண, பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொது மக்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை