கரூர் பஸ் ஸ்டாண்டில் புதிய கழிப்பறை திறப்பு
கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில், திறக்கப்படாமல் இருந்த புதிய கழிப்-பறை மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.கரூர் பஸ் ஸ்டாண்டில், மாநக-ராட்சி சார்பில் திருச்சி பஸ்கள் நிற்கும் இடம் எதிரில், இலவச கழிப்பறை, மதுரை பஸ் நிற்கும் இடம் அருகில் கட்டண கழிப்பறை உள்ளது. இங்குள்ள, பய-ணிகள் போதுமான கழிப்பறை வசதிகள் இல்லாததால், திண்டா-டுகின்றனர். சேலம் பஸ்கள் நிற்கும் இடத்தின் எதிரில், 31 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டண கழிப்பறை கட்டப்பட்டு உள்-ளது. பல மாதங்களாக கழிப்பறை கட்டுமான பணிகள் முடிக்கப்-பட்டு திறக்கப்படவில்லை. உடனடியாக கழிப்பறையை திறக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நமது நாளிதழில் கடந்த, 23ல் செய்தி வெளியானது. இதையடுத்து, புதிய கட்டண கழிப்-பறை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.