உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தனியார் பள்ளி வளாகத்தில் பூங்கா: திமுகவினர் மீது புகார்

தனியார் பள்ளி வளாகத்தில் பூங்கா: திமுகவினர் மீது புகார்

குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி நிதியில் தனக்கு சொந்தமான தனியார் பள்ளி வளாகத்தில் பூங்கா அமைத்து வரும் நகர திமுக செயலாளரும், கவுன்சிலருக்கு உடந்தையாக பேரூராட்சி செயல் அலுவலர் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இடம் இருந்தும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பூங்கா அமைக்காமல் திமுக கவுன்சிலர் நடத்தி வரும் தனியார் பள்ளி வளாகத்தில் பூங்கா அமைத்து வருவதை சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியர், தமிழக முதல்வர் பிரிவுக்கு மனு அளித்திருந்த நிலையில், சமூக ஆர்வலரை கொலை மிரட்டல் விடுத்து வருவதாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் புகார்.கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் பேரூர் கழகச் செயலாளராகவும், பேரூராட்சி ஐந்தாவது வார்டு கவுன்சிலர் ஆகவும். பேரூராட்சி மன்ற தலைவரின் மகனாகவும் இருந்து வருபவர் சசிகுமார்.இவர் அரசு ஒப்பந்தங்களை எடுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.கடந்த வருடம் பேரூராட்சி நிதியிலிருந்து கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கோவக்குளத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 43 லட்சம் ரூபாய் நிதியில் பூங்கா அமைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் பள்ளியில் சசிகுமாரும் பங்குதாரராக உள்ளார்.கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கோவக்குளம் ஊரினுள் கோயில் அருகே 60 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அல்லது ஊருக்குள் அரசு இடத்தில் பூங்கா அமைக்கலாம் ஆனால் அதை தவிர்த்து தனியார் பள்ளி வளாகத்தில் அரசு செலவில் பூங்கா அமைப்பதற்கான அவசியம் ஏன் வந்தது என்ன பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மேலும் ஊரை விட்டு வெளியே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் பூங்கா அமைப்பதற்கான அவசியம் ஏன்? தான் பங்குதாரராக உள்ள பள்ளியை மேம்படுத்த அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.மேலும் சசிகுமார் மேற்கொண்ட ஒப்பந்த பணிகளில் அதிகளவில் ஊழல் நடைபெற்று உள்ளதாகவும், பணிகளும் மோசமாக இருந்த காரணத்தினால் கிருஷ்ணராயபுரம் யூனியன் அலுவலகத்தில் அவருக்கான அரசு ஒப்பந்தத்தை கூட ரத்து செய்து உள்ளதாகவும், தற்போது ஆளுங்கட்சியில் பேரூர் கழகச் செயலாளராகவும், ஐந்தாவது வார்டு கவுன்சிலர் ஆகவும் உள்ளார்.மேலும் இவரது தாயார் தான் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி தலைவராகவும் உள்ளார். கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் பல்வேறு நிதி முறைகேடுகளை ஈடுபட்டு வருவதாகவும், பேரூராட்சி செயல் அலுவலரும் அவர்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும் அமிர்தானந்தம் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் இது குறித்து அவர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக முதல்வர் தனி பிரிவுக்கு புகார் அளித்த போது கூலிப்படையினை கொண்டும் தன்னை தாக்கியதாகவும், மேலும் அவரது உறவினர்களை வைத்து தன்னை அடிக்கடி வம்பு இழுத்து சண்டைக்கு வந்துள்ளனர் என்றும், ஆனால் மாயனூர் காவல் நிலையத்தில் தான் அவர்களை கத்தியால் தாக்கியதாக கூறி பொய் புகார் அளித்து தன்னை சிறைக்கு அனுப்ப முயன்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.இந்நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் சமூக அலுவலர் கருப்பு உடைகளுடன் வந்து ணமுறைகேடுக்கான ஆதாரங்கள் புகார் மனுக்கள் கழுத்தில் தொங்கவிட்டவாறு மனு அளித்துள்ளார்.அரசின் நிதியில் தனியார் பள்ளி வளாகத்தில் பூங்கா அமைப்பதற்கு காரணம் என்ன என பேரூராட்சி செயல் அலுவலர் யுவராணி இடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, பேரூராட்சிக்கு அந்தப் பள்ளியில் 50 சென்ட் நிலம் கொடுத்துள்ளார்கள்வேறு எங்கும் இடமில்லை. அரசின் விதிகளுக்கு உட்பட்டு தான் அங்கு பூங்கா அமைத்து வருகிறோம் என மழுப்பலான பதிலை கூறினார்இவர் ஒப்பந்தம் எடுத்து இரண்டாவது வார்டு மஞ்ச மேடு பகுதியில் பணிகள் மேற்கொண்டு தரம் இல்லாமல் கட்டி முடிக்காமலே கழிவுநீர் வடிகால் இடிந்து விழுந்தது.இது குறித்து திமுக நகர செயலாளர் கவுன்சிலருமான சசிகுமார் கூறியதாவது. முறைப்படி திருமணம் நிறைவேற்றப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்று அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ