உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது

கரூர் கலெக்டர் அலுவலகத்தில், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்து விட்டதால், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.கரூர் கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கள் கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில், ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். மற்ற நாட்களில் பல்வேறு வேலை நிமித்தமாக பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதற்காக, அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயனபாட்டிற்காக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வேலை செய்யவில்லை. அதனை பழுது நீக்கும் பணி மேற்கொள்ள, அங்கிருந்து சுத்திகரிப்பு இயந்திரத்தை எடுத்து சென்று விட்டனர். இதனால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்காமல், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.நேற்று குறைதீர் கூட்டத்தில் வந்தவர்கள், ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை, 20 முதல், 25 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கினர். உடனடியாக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சரி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ