உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மின் கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற கோரிக்கை

மின் கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற கோரிக்கை

கரூர்: கரூர் அருகே, மின் கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் அருகே நொய்யலில் இருந்து, வைரமடைக்கு செல்லும் மாநில நெடுஞ்-சாலையில் ஏராளமான மின் கம்பங்கள் மூலம் மின் வினியோகம் அளிக்கப்பட்டு வருகிறது. இதில், சேர்வைக்காரன் பாளையத்தில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் செடி, கொடிகள் அதிக-ளவில் படர்ந்துள்ளன. இதனால், மின் கம்பங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், உடனடியாக சரி செய்ய முடியாமல் மின்வா-ரிய ஊழியர்கள் தடுமாறுகின்றனர்.தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கம்பங்-களில் உள்ள கொடிகள் மூலம், அடிக்கடி மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. பருவமழை தொடங்கும் முன், மின் கம்பங்களில் உள்ள கொடிகளை அகற்ற வேண்டியது அவசியமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை