உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் அருகே மழை நீரை அகற்றகோரி சாலை மறியல்

கரூர் அருகே மழை நீரை அகற்றகோரி சாலை மறியல்

கரூர்: கரூர் அருகே, மழை நீரை அகற்றகோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்., ஸ்டேட் பாங்க் காலனியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்நிலையில், நேற்று மாலை பெய்த மழையால், கழிவுநீர் வாய்க்காலில், ஸ்டேட் பாங்க் குடியிருப்பு பகுதிகளின் மழைநீர் தேங்கியது. இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஆண்டாங்கோவில்-மதுரை இணைப்பு நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கரூர் டவுன் போலீசார், ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்., நிர்வாகத்திடம் சொல்லி, மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், ஆண்டாங்கோவில் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்