உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாதந்தோறும் ஊதியம் கோரி துாய்மை பணியாளர் மனு

மாதந்தோறும் ஊதியம் கோரி துாய்மை பணியாளர் மனு

கரூர்:மாதந்தோறும் ஊதியம், நிரந்தர பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கோட்டமேடு அரசு ஆதி திராவிடர் நல மேல் நிலைப்பள்ளி துாய்மை பணியாளர் மயில்ராஜ், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.அதில், கூறியிருப்பதாவது:குளித்தலை கோட்டமேடு அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், துாய்மை பணியாளராக பணியாற்றி வருகிறேன். மாதந்தோறும், 3,000 ரூபாய் ஊதியம் ஊரக வளர்ச்சிதுறை சார்பில் வழங்கப்படுகிறது. மூன்று அல்லது ஐந்து மாதங்களுக்கு ஒரு முறை ஊதியம் பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக அளிக்கப்படுகிறது.குறைந்த ஊதியம் வழங்கியும் கூட மிகவும் காலதாமதமாக அளிக்கப்படுகிறது. பகுதி நேர பணி என்ற போதும் கூட, முழு நேரம் வேலை செய்ய வேண்டி உள்ளது. இதனால், வேறு வேலை செய்ய முடியவில்லை. இந்த ஊதியத்தை வைத்து கொண்டு, குடும்பம் நடத்துவது சிரமமாக உள்ளது. பாதுகாவலர் உள்பட ஏதாவது நிரந்தர பணி வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ