உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையில் ஆறாக ஓடிய கழிவு நீர்

சாலையில் ஆறாக ஓடிய கழிவு நீர்

கரூர்: கரூர் அருகே, சாலையில் கழிவு நீர் ஆறாக ஓடியதால், வாகன ஓட்டிகள், மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.கரூர் அருகே, அருகம்பாளையம் பிரிவில், குடியிருப்புகள், மருத்துவமனைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. ஆனால், அப்பகுதியில், போதிய சாக்கடை கால்வாய் வசதி இல்லை. ஒரு சில பகுதிகளில், சாக்கடை கால்வாயிலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது.பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், கரூர் மாநகராட்சி நிர்வாகம் சரி செய்யாமல் அலட்சியமாக உள்ளது. இந்நிலையில், பல நாட்களாக அருகம்பாளையம் பிரிவில், சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடும் நிலை உள்ளது.அப்போது, துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. இதனால், கரூர் மாநகராட்சி அதிகாரிகள், சாக்கடை கால்வாயில் இருந்து, கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி