மேலும் செய்திகள்
போதை மாத்திரை விற்ற மூவருக்க 'காப்பு'
15-Aug-2024
கரூர்: கரூரில், தங்கையின் காதல் திருமணத்துக்கு காரணமாக இருந்த-தாக கருதி, வாலிபரை கத்தியால் குத்திய, அண்ணனை போலீசார் கைது செய்தனர்.கரூர், வையாபுரி நகர் முதலாவது கிராஸ் பகுதியை சேர்ந்த ராஜூ என்பவரது மகன் பிரபு, 30; இவரது தங்கை நந்தினியை, 25, சங்கர் என்பவர் ஒரு மாதத்துக்கு முன், காதலித்து திருமணம் செய்து கொண்டார்.நந்தினியின் காதல் திருமணத்துக்கு, காரணமாக இருந்ததாக கருதி, அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார், 28, என்பவரிடம் கடந்த, 22 இரவு இது குறித்து பிரபு கேட்டுள்ளார்.அப்போது வினோத்குமாருக்கும், பிரபுவுக்கும் தகராறு ஏற்பட்-டது. ஆத்திரமடைந்த பிரபு, வினோத்குமாரின் கழுத்தில் கத்-தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்த அவர் கரூர் அரசு மருத்-துவ கல்லுாரி மருத்துவமனையில் கிசிச்சை பெற்றார்.இதுகுறித்து, வினோத்குமார் கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் பிரபுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.
15-Aug-2024