உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சியில் சாலை மேம்பாட்டு பணி ஆய்வு

அரவக்குறிச்சியில் சாலை மேம்பாட்டு பணி ஆய்வு

அரவக்குறிச்சி, குடிநீர் குழாய் பதிக்கும் பணி மற்றும் சாலை மேம்பாடு பணிகளை, உதவி கோட்ட பொறியாளர் ஆய்வு செய்தார்.அரவக்குறிச்சி உட்கோட்டத்தில், தாடிக்கொம்பிலிருந்து பள்ளப்பட்டி வழியாக, அரவக்குறிச்சி செல்லும் சாலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம், ஒட்டன்சத்திரம் வரை குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியால், சாலை போக்குவரத்து பெரும் பாதிப்படைத்துள்ளது. இந்நிலையில் பணியை விரைந்து முடித்து, போக்குவரத்தை சீர் செய்ய மற்றும் சாலை மேம்பாடு பணிகளை செய்திட, கரூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அழகர்சாமி, குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் திவ்யா ஆகியோர் அரவக்குறிச்சியில் ஆய்வு செய்தனர்.அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் வினோத் குமார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை