உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் முதல்வரின் மருந்தகம் இரண்டு இடங்களில் செயல்படவுள்ளது

கரூர் மாவட்டத்தில் முதல்வரின் மருந்தகம் இரண்டு இடங்களில் செயல்படவுள்ளது

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது.மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவ-லரும், பதிவுத்துறை தலைவருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சிறப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில், கரூர் மாவட்-டத்தில், முதல்வரின் மருந்தகம் செயல்படுத்தப்படவுள்ள இரு இடங்கள், மருந்து சேமிப்பு கிடங்கு, கொள்முதல் செய்யும் இடங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. வட்டார போக்குவ-ரத்து அலுவலகத்தில், மினி பஸ் இயக்குவது தொடர்பாக அளிக்-கப்பட்ட விண்ணப்பங்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்-கைகள் குறித்தும், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு அளிக்-கப்பட்ட மனுக்கள் மீது பரிசீலனை செய்ய வேண்டும். வீட்டு-மனைகள் அளிப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்கள், நிலத்தின் வகைப்பாடுகள், நிலத்தின் அளவுகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு செய்ய உத்தர-விடப்பட்டது. பின், தான்தோன்றிமலை, வாங்கல் பகுதிகளில் செயல்பட உள்ள முதல்வர் மருந்தகம் விற்பனை நிலையம் தயா-ராகி வருவதையும், பஞ்சமாதேவி பகுதியில் முதல்வர் மருந்த-கத்திற்கான மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கு செயல்பட-வுள்ள இடமும் ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் பாபு, மாநகராட்சி கமிஷனர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ