உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கருகும் பயிரை காக்க கழிவு நீரை பாய்ச்சும் அவலம்

கருகும் பயிரை காக்க கழிவு நீரை பாய்ச்சும் அவலம்

ஈரோடு: காளிங்கராயன் வாய்க்காலில் முன்கூட்டியே பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டதால், 300 ஏக்கருக்கு மேல் நெற்பயிர் பாதித்துள்ளது. இதனால் பயிரை காப்பாற்ற, கழிவு நீரை மோட்டார் வைத்து உறிஞ்சி காப்பாற்றும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.பவானிசாகர் அணையில் திறக்கப்படும் தண்ணீர், பவானி ஆறு வழியாக வரும். பவானி ஆற்றில், காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து ஈரோடு வழியாக ஆவுடையார்பாறை வரை தண்ணீர் வாய்க்காலில் சென்று, 15,400 ஏக்கருக்கு மேல் பாசன வசதி தருகிறது.நடப்பாண்டு அணையில் நீர் மட்டம் சரிவு, நீர்வரத்து இல்லாததால் பாசனத்துக்கு கடந்த மாதமே தண்ணீர் நிறுத்தப்பட்டது. வழக்கமாக ஜூன், 15க்குள் தண்ணீர் திறந்து ஏப்., 30 வரை தண்ணீர் பாயும்.இம்முறை அவ்வாறு இல்லாமல், 30 நாட்களுக்கு முன்பே தண்ணீர் நிறுத்தப்பட்டு, கசிவு நீரும், சாக்கடை கழிவு நீரும், சாயக்கழிவு நீரும் கால்வாயில் சென்று கொண்டிருக்கிறது. இதனால் கிணறு உள்ளிட்ட பிற பாசனம் வைத்துள்ள விவசாயிகள் தவிர, மற்ற விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர். குறிப்பாக நெல், மஞ்சள் சாகுபடி செய்த விவசாயிகள் முற்றிலும் பாதித்துள்ளனர். ஈரோடு அருகே கருங்கல்பாளையம், வைராபாளையம், வெண்டிபாளையம் பகுதிகளில், 300 ஏக்கருக்கு மேல் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பயிரை காப்பாற்ற டிராக்டர், டேங்கர் லாரிகளில் தண்ணீரை கொண்டு வந்தும், கழிவு நீரை டீசல் மோட்டார் வைத்து இறைத்தும் பயிருக்கு பாய்ச்சும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம், நீர் வளத்துறையினர் முறையான நீர் பாசன அட்டவணை வகுப்பதில்லை. விருப்பு, வெறுப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட பாசனங்களுக்கு தண்ணீரை வழங்கிவிட்டு, குறிப்பிட்ட பாசனங்களுக்கு தண்ணீரை வழங்குவதில்லை.இம்முறை நெல் பயிருக்கு ஏக்கருக்கு, 30,000 ரூபாய்க்கு மேல் செலவு செய்த விவசாயிகளும் கடுமையாக பாதித்துள்ளோம். பயிரை காப்பாற்ற டிராக்டர் தண்ணீர், டீசல் மோட்டார் வைத்து இறைப்பதால் கூடுதலாக, 5,000 முதல், 6,000 ரூபாய் வரை செலவாகிறது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ