உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / துார் வாரப்படாத குளம், வாய்க்கால் குடிநீருக்கு திண்டாடும் கிராம மக்கள்

துார் வாரப்படாத குளம், வாய்க்கால் குடிநீருக்கு திண்டாடும் கிராம மக்கள்

துார் வாரப்படாத குளம், வாய்க்கால்குடிநீருக்கு திண்டாடும் கிராம மக்கள்கரூர் ஆக. 30-- வெள்ளியணையில், குளம், வாய்க்கால் துார்வாரப்படாமல் இருப்பதால், குடிநீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகின்றனர்.கரூர் மாவட்டத்தில் உள்ள, நான்கு பெரிய குளங்களில் வெள்ளியணையில் பெரிய குளமும் ஒன்றாகும். 400 ஏக்கர் நீர் தேங்கும் பரப்பளவை கொண்ட இந்த குளம் நிரம்பினால் சுற்று பகுதிகளில் உள்ள, கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் உயரும். இங்கிருந்து வாய்க்கால் மூலம் உப்பிடமங்கலம், வீராக்கியம் குளத்துக்கு தண்ணீர் செல்கிறது. அந்த பகுதியிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தடையின்றி பயன்படுகிறது.வெள்ளியணை குளம் தொடர் மழை அல்லது குடகனாறு அணையிலிருந்து வரும் நீரின் காரணமாக நிரம்பினால், உபரி நீர் உப்பிடமங்கலம், வீராக்கியம் குளத்திற்கு செல்லும். தற்போது வாய்க்கால் துார்வாரப்படாமல் உள்ளது. புதர் மண்டியும் மேடு பள்ளங்களாகவும் மாறி, துார்ந்து போகக்கூடிய நிலையில் உள்ளது. வெள்ளியணை பகுதியில் கழிவுநீர் நேரடியாக விடப்படுகிறது. எனவே வாய்க்காலை துார் வார வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ