மேலும் செய்திகள்
பக்தர்கள் மீது மாடு தாண்டும் திருவிழா
05-Oct-2025
ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் விபரீத முடிவு
05-Oct-2025
அரசு பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
05-Oct-2025
திருப்பூர் குமரன் பிறந்த நாள் விழா
05-Oct-2025
கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட மகிளிப்பட்டி, புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, உடையந்தோட்டம், நரசிங்கபுரம், பஞ்சப்பட்டி ஆகிய பகுதியில் விவசாயிகள் பரவலாக விளை நிலங்களில் காய்கறி சாகுபடி செய்துள்ளனர்.இங்கு வெண்டை, கத்திரி உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. காய்கறி செடிகளுக்கு தேவையான தண்ணீர், கிணற்று நீர் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது. தற்போது, செடிகளில் பூக்கள் பூத்து, காய்கள் பிடித்து வருகிறது. விளைந்த காய்கறிகளை விவசாயிகள் பறித்து, உள்ளூர் வாரச்சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர். இதில், கத்திரிக்காய் கிலோ, 40 ரூபாய், வெண்டை கிலோ, 30 ரூபாய் என்ற விலையில் விற்பனை நடக்கிறது. காய்கறிகள் சாகுபடி மூலம் விவசாயிகளுக்கு வருமானம் கிடைத்து வருகிறது.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025