மேலும் செய்திகள்
தர்மபுரி, கி.கிரியில் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்
31-Dec-2024
குளித்தலை: குளித்தலை அருகே, புதுப்பாளையம் கிராமத்தில் ஸ்ரீ வீரிய ஆதிசக்தி விநாயகர் ஸ்ரீ சாந்த சொரூப ஆஞ்சநேயருக்கு, நான்காம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, ஒரு லட்சம் வடை மாலை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. குளித்தலை அருகே, வைகநல்லுார் ஊராட்சி புதுப்பாளையம் எம்.ஜி.ஆர்., நகரில் அருள்பாலித்து கொண்டிருக்கும், ஸ்ரீ வீரிய ஆதி சக்தி விநாயகர் ஸ்ரீ சாந்த சொரூப ஆஞ்சநேயருக்கு கீழ குட்டப்பட்டி புதுப்பாளையம் மக்கள் சார்பில், அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதில் ஆஞ்சநேயருக்கு, ஒரு லட்சம் வடை மாலை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து தேவராட்டமும் தப்பாட்டமும் நடைபெற்றது.
31-Dec-2024