மர்ம விலங்கை கண்டுபிடிக்க மேலும் 100 டிராக் கேமரா
சேந்தமங்கலம் : கொல்லிமலையில் நடமாடும் மர்ம விலங்கை கண்டுபிடிக்க, சத்தியமங்கலம் காட்டிலிருந்து, 100 டிராக் கேமராக்கள் வரவழைக்கப் பட்டுள்ளன.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், கடந்த, 10 நாட்களாக மர்ம விலங்கு, ஆடுகளை கடித்து கொன்று வருகிறது. இதுவரை, 25க் கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன. மர்ம விலங்கை கண்டுபிடிக்க, வனத்துறை யினர் சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 'டிராக் கேமரா'க்கள் கொண்டுவந்து, 50க்கும் மேற்பட்ட இடங்களில் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். ஆனால், இந்த கேமராக்களில் மர்ம விலங்கு சிக்காமல், கேமரா இல்லாத பகுதிகளில் சென்று ஆடுகளை வேட்டையாடி வருகிறது. எனவே, இந்த மர்ம விலங்கு சிறுத்தை புலியா அல்லது காட்டு நாய்களா என்பதை கண்டுபிடிக்க வனத் துறையினர், சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து, 100, 'டிராக் கேமரா'க்களை வரவழைத்துள்ளனர். இந்த கேமராக்கள், கொல்லிமலை வனப்பகுதியில் பொருத்தும் பணி நடக்கிறது. 'கடந்த, 5 நாட்களாக பொருத்தப்பட் டிருந்த, 'டிராக் கேமரா'வில் நாய்கள் மட்டுமே உள்ளதாக வும், புதிதாக மேலும் பொருத்தப்படும், 100, 'டிராக் கேமரா'க்களில் ஒரு இடத்திலாவது அந்த மர்ம விலங்கு சிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது' என, வனத்துறையினர் தெரிவித் தனர்.